குடும்பத் தகராறு: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

தஞ்சாவூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தஞ்சாவூர் அருகே உள்ள ராயமுன்டான்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி ஸ்ருதி (24 வயது). இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருவிழாப்பட்டியில் வசித்து வந்தனர்.

ரெங்கராஜூக்கும் அவருடைய மனைவி ஸ்ருதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஸ்ருதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஸ்ருதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஸ்ருதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தஞ்சை உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com