குடும்பத் தகராறு: மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவாரூர் அருகே கூடூர் நாரணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28 வயது). இவருடைய மனைவி சவுந்தர்யா (25 வயது). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சவுந்தர்யா கணவனிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்

இதில் மனமுடைந்த மணிகண்டன், களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com