குடும்ப பிரச்சினை: அசாம் மாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் வசித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2-வது திருமணம் நடைபெற்றுள்ளது.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடியில்,

தூத்துக்குடியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2-வது திருமணம்

அசாம் மாநிலம் புனித் புரா மாவட்டம் ஹெசாங் பகுதியைச் சேர்ந்தவர் சீதா நெவார் (வயது 32). விவாகரத்தான இவருக்கும், தீப் ஜோதிநாத் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2-வது திருமணம் நடைபெற்றுள்ளது. தீப் ஜோதிநாத் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

அசாம் மாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இதன் காரணமாக இந்த தம்பதியினர் கடந்த 2 மாதங்களாக மடத்தூர் அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதி இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சீதா நெவார், இன்று அதிகாலையில் தனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சீதா நெவாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com