குடும்ப பிரச்சினை: தூத்துக்குடியில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த வாலிபர், கேரள மாநிலத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த மீனவர் ஒருவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சினை- மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த அந்தோணிதாசன் மகன் ஜான்சன் (வயது 32). இவர் கேரள மாநிலத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், கேரளாவில் இருந்து சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு ஜான்சன் வந்துள்ளார். அங்கு குடும்பப் பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜான்சன், நேற்று இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com