பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்


பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்
x
தினத்தந்தி 29 May 2025 10:20 AM IST (Updated: 29 May 2025 11:36 AM IST)
t-max-icont-min-icon

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75

சென்னை,

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ்.

நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், 47 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வந்த நடிகர் ராஜேஷுக்கு இன்று காலை தீடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், வெளிநாட்டில் இருக்கும் அவரது மகள் திவ்யா சனிக்கிழமை (மே 31-ந் தேதி) நள்ளிரவில் தான் சென்னை வந்தடைவார் என்று கூறப்படுகிறது. அதனால், நடிகர் ராஜேஷின் இறுதி சடங்கு ஜூன் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story