ரஜினி, விஜய் படங்களில் பாடிய பிரபல பின்னணி பாடகர் மரணம்

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா சென்னையில் மரணம் அடைந்தார்.
ரஜினி, விஜய் படங்களில் பாடிய பிரபல பின்னணி பாடகர் மரணம்
Published on

சென்னை,

பிரபல பாடகர் பம்பா பாக்யா சென்னையில் மரணம் அடைந்தார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராவணன் படத்தில் இடம்பெற்ற 'கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு' என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகமானார். ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் 'இவன் பேர் சொல்லும்' என்ற பாடலை பாடினார். 2.0 படத்தில் 'புள்ளினங்காள்' என்ற பாடலையும் பாடி இருக்கிறார். விஜய்யின் சர்க்கார் படத்தில் இடம் பெற்ற சிம்டங்காரன், சர்வம் தாள மயம் படத்தில் இடம்பெற்ற டிங்கு டாங்கு பாடல்களையும் பாடி இருக்கிறார். பிகில், இரவின் நிழல் உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி பாடலை ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பாடி இருக்கிறார். 'அடி எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே' என்று இவர் பாடிய இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

சென்னை பாடி அருகே வசித்து வந்த பம்பா பாக்யாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49. பம்பா பாக்யா மறைவுக்கு இசைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com