காஞ்சிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை


காஞ்சிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
x
தினத்தந்தி 11 March 2025 3:17 PM IST (Updated: 11 March 2025 3:26 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு அருகே பிரபல ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் அருகே பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில், பிரபல ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த வசூல் ராஜா. இவர் மீது 20-க்கு மேற்பட்ட கொலை கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில், உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜாவை வீட்டின் அருகாமையில் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story