அனுபமாவை கேலி செய்த ரசிகர்கள்

ரசிகர்கள் பட வாய்ப்புக்காக ராஜமவுலியின் காலை பிடித்து அனுபமா காக்கா பிடிக்கிறார் என்று கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
அனுபமாவை கேலி செய்த ரசிகர்கள்
Published on

கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுக்கு ஜோடியானார். தெலுங்கில் முன்னணி இளம் நடிகையாக உயர்ந்துள்ளார். இவருக்கு ஆந்திராவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். நிகில் ஜோடியாக தெலுங்கில் நடித்த கார்த்திகேயா 2 படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காததாலும், கொரோனா பரவல் காரணமாகவும் பல தடவை தள்ளிவைக்கப்பட்டு தாமதமாக இப்போது வெளியாகி உள்ளது.

படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் அனுபமா பரமேஸ்வரன் நிம்மதி அடைந்துள்ளார். படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து அனுபமா பரமேஸ்வரன் பார்த்தார். பின்னர் அதே தியேட்டரில் படம் பார்க்க வந்த பிரபல தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி அருகில் சென்று அவரது காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக ராஜமவுலியின் காலை பிடித்து அனுபமா காக்கா பிடிக்கிறார் என்று கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது அனுபமாவை சங்கடப்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com