விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்
விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்
Published on

பூதலூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படும் என உதவி இயக்குனர் தெரிவித்தார்.

உயர்விளைச்சல் பெற

இதுகுறித்து பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. நெல் சாகுபடியில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினை நீக்கி உயர்விளைச்சல் பெற ஜிப்சம் 200 கிலோ ரூ.250 மானிய விலையிலும், ஜிங்சல்பேட் 10 கிலோ ரூ.250 மானியவிலையிலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகத்திற்கு தயாராக உள்ளது.

50 சதவீத மானியம்

மண்வளம் காக்கும் பசுந்தாளுர பயிரான தக்கைப்பூண்டு விதைகள் 50 சதவீத மானிய விலையில் 1600 கிலோ இருப்பில் உள்ளது. கோடையில் 90

நாட்களில் கூடுதல் லாபம் தரக்கூடிய சோயாமொச்சை விதைகள் 50 சதவீத மானிய விலையில் 3000 கிலோ இருப்பில் உள்ளது. உயர்விளைச்சல் தரக்கூடிய எள்

தரமான டிஎம்வி (எஸ்வி) 7 எள் 820 கிலோ 50 சதவீத மானிய விலையில் இருப்பில் உள்ளது. மண்ணில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை கிரகித்து பயிர்களுக்கு அளிக்கக்கூடிய திரவ மற்றும் பாக்கெட் வடிவிலான உயிர்உரங்கள், அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் மற்றும் பொட்டாஷ் 2600 லிட்டர் மற்றும் 1700 எண்கள் இருப்பில் உள்ளன.

முன்னுரிமை அடிப்படையில்

நெல் நுண்ணூட்டம் 2600 கிலோ, பயறுநுண்ணூட்டம் 1400 கிலோ, கடலை நுண்ணூட்டம் 640 கிலோ ஆகியவை இருப்பில் உள்ளன. மேலும் பயிர்பாதுகாப்பு உபகரணங்கள் பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் தார்பாலின், பண்ணை கருவிகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட கிராமங்களான ஆற்காடு, செல்லப்பன்பேட்டை, புதுப்பட்டி, செங்கிப்பட்டி, சானூரப்பட்டி, பாலையப்பட்டி வடக்கு, புதுக்குடி, வெண்டையம்பட்டி, காங்கேயம்பட்டி, நந்தவனப்பட்டி, மைக்கேல்பட்டி, பவணமங்கலம், விட்டலபுரம், நேமம், ரெங்கநாதபுரம், அகரப்பேட்டை, மேகளத்தூர், மாரனேரி ஆகிய 18 கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

விரிவாக்க மையங்கள்

எனவே எதிர்வரும் கோடை நெல் சாகுபடி, உளுந்து, எள், சோயாமொச்சை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com