தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது

ஈரோடு மாவட்டத்தில் தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது தோட்டத்தில் 4 கஞ்சா செடிகள் பயிரிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 4 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி சுப்பிரமணி (வயது 63) என்பவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com