போடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

போடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
போடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

போடி டி.வி.கே.கே.நகரை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 44). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்ற ஆதிநாராயணன், அங்கு பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆதிநாராயணன் உயிரிழந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com