விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டா
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் சின்ன கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43). விவசாயி. இவர் கடந்த ஒரு வாரம் முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வலி தாங்காமல் அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.அதேபோல் சந்திரசேகர் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரில் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

X

Daily Thanthi
www.dailythanthi.com