வடபொன்பரப்பி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

வடபொன்பரப்பி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடபொன்பரப்பி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Published on

மூங்கில்துறைப்பட்டு, 

வடபொன்பரப்பி அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 70), விவசாயி. சம்பவத்தன்று இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யம்பெருமாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com