கடலூர் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

கடலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டா.
கடலூர் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

திருப்பாதிரிப்புலியூர், 

கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39), விவசாயி. இவரது மனைவி சீத்தாலட்சுமி (33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு வேல்முருகனின் தந்தை பழனி மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். அன்று முதல் வேல்முருகன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சீத்தாலட்சுமி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com