விஷம் குடித்து விவசாயி தற்கொலை

காணை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டா.
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

காணை:-

காணை அருகே உள்ள காங்கேயனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 61), விவசாயி. சம்பவத்தன்று இவர் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்று அங்கு விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com