தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 54). இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்ததால் ஒரு வருடத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்து வந்தார். தற்போது கடந்த சில மாதங்களாகவே மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமாக ஏற்படவே வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com