முத்தாண்டிக்குப்பம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

முத்தாண்டிக்குப்பம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
முத்தாண்டிக்குப்பம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

முத்தாண்டிக்குப்பம், 

முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள மருங்கூர் காலனியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45), விவசாயி. குடிப்பழக்கம் உடைய வீரமுத்துவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com