புதுப்பேட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

புதுப்பேட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டா.
புதுப்பேட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள ஒறையூரை சேர்ந்தவர் சாரங்கபாணி மகன் சிவா (வயது 42), விவசாயி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் சிவா, கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் வைத்து விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவா, பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் அஞ்சலை, புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com