மொபட் மீது பள்ளி வாகனம் மோதி விவசாயி சாவு

மாரண்டஅள்ளி அருகே= மொபட் மீது பள்ளி வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
மொபட் மீது பள்ளி வாகனம் மோதி விவசாயி சாவு
Published on

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சர்க்கரை (வயது 52). விவசாயி. இவர் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சர்க்கரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து பெற்றோர் சென்று சர்க்கரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com