மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
Published on

புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 58). விவசாயியான இவர் மொபட்டில் மால்வாயில் இருந்து கல்லக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மேலரசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, சரடமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் நவீன்குமார் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அண்ணாமலையை அப்பகுதியினர் மீட்டு கல்லக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் விபத்தை ஏற்படுத்திய நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் பலியான அண்ணாமலை, சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.வின் தங்கை கணவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com