மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலி

இரும்புதலை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலி
Published on

மெலட்டூர்:

பாபநாசம் தாலுகா, இரும்புதலை மேல ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 65). விவசாயியான இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் இரும்புதலை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காளிமுத்து, பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com