விழுப்புரம் அருகேமின்சாரம் தாக்கி விவசாயி சாவு

விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தா.
விழுப்புரம் அருகேமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
Published on

விழுப்புரம் அருகே அய்யூர்அகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஸ்ரீதர் (வயது 39), விவசாயி. இவர் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com