விபத்தில் விவசாயி சாவு:வேன் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்

விபத்தில் விவசாயி இறந்த வழக்கில் வேன் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோட்டு உத்தரவிட்டது.
விபத்தில் விவசாயி சாவு:வேன் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்
Published on

கடத்தூர்

கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூர் காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 68). விவசாயி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கெட்டிச்சவியூர் குன்னத்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக திருப்பூரை சேர்ந்த ரவீந்திரன் (54) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் சோமசுந்தரத்தின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி முதலாவது வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரவீந்திரன் மீது வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி வேன் டிரைவர் ரவீந்திரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com