

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூர் 12-வது வார்டு வேதமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55), விவசாயி. இவர், மளிகை பொருட்கள் வாங்க சைக்கிளில் பஸ் நிலையம் அருகே வந்துள்ளார். அப்போது கலவையில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென சேகர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக கலவை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.