மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 33). இவர் நேற்று காலை தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அதில் மின்சாரம் கசிந்ததால், அவர் மின் மோட்டாரை இயக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ராஜ்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com