மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தென்னமநாடு வடக்குதெருவை சேர்ந்தவர் அருள் (வயது52) விவசாயி. இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

அருள் நேற்று மதியம் அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின் கம்பி அறுந்து அருள் மீது விழுந்தது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com