மின்சாரம் தாக்கி விவசாயி பலி

போளூரில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அங்காளம்மன் பரமேஸ்வரி தெருவை சேர்ந்த பூங்காவனின் மகன் பாஸ்கரன் (வயது 40), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் போளூரில் இருந்து சனிக்கவாடி செல்லும் வழியில் உள்ளது. நிலத்திற்கு சென்ற பாஸ்கரன் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பாஸ்கரனின் உறவினர் சுரேஷ் என்பவர் நிலத்தில் சென்று பார்த்த போது பாஸ்கரன் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடப்பது தெரியவந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com