மரக்கிளையை வெட்டும்போது மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

தானிப்பாடி அருகே மரக்கிளையை வெட்டும்போது மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
மரக்கிளையை வெட்டும்போது மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
Published on

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே இளையாங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்தவர் டல்லாஸ் (வயது 55), விவசாயி.

இவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தை இன்று மாலை டல்லாஸ் வெட்டி கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை அருகில் இருந்த மின்சார கம்பியில் டல்லாஸ் கைப்பட்டது.

இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்திவிட்டு பெருங்குளத்தூர் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

அதன்பேரில் உதவி பொறியாளர் மற்றும் மின்சார துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com