பஸ் மோதி விவசாயி பலி

களக்காடு அருகே பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பஸ் மோதி விவசாயி பலி
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழக்கள்ளிகுளத்தை சேர்ந்தவர் நம்பி (வயது 60). விவசாயியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் களக்காடு வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார். களக்காடு அருகே கல்லடி- சிதம்பரபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, களக்காடு நோக்கி வந்து கொண்டு இருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மாட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட நம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அவரது மகன் முப்பிடாதி களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து, பஸ்சை ஓட்டி வந்த இம்மானுவேல் ராஜாசிங்கிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com