கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலியானார்.
கார் மோதி விவசாயி பலி
Published on

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று இரவு தேனூர் பிடாரியம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து டி.களத்தூர் நோக்கி வந்த கார் பெரியசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com