கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கார் மோதி விவசாயி பலி
Published on

சின்னதாராபுரம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 66). விவசாயியான இவர், நேற்று தனது வீட்டில் இருந்து சின்னதாராபுரத்தை நோக்கி கரூர்-தாராபுரம் சாலையில் வாய்க்கால் தோட்டம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து தாராபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் முனியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனியப்பன் படுகாயம் அடைந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com