மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

செய்யாறில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
Published on

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கொடநகர் நல்ல தண்ணீர் குளத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயி. இவர் நேற்று இரவு 8 மணி அளவில் பஜார் வீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆரணி கூட்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து முருகனின் மனைவி ஜீவா செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com