விவசாயி மர்மசாவு

கிருஷ்ணகிரி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி மர்மசாவு
Published on

கிருஷ்ணகிரி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று முனதினம் வழக்கம் போல தனது விவசாய நிலத்திற்கு வேலைக்காகசென்றார்.

மாலை அவரது நிலம் வழியாக பொதுமக்கள் சிலர் சென்றனர். அந்த நேரம் அங்கு வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கை, கால், தொடை மற்றும் கழுத்து பகுதியில் தோல் உரிந்த நிலையில் இருந்தது.

சந்தேக மரணம்

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து அவரது மகன் ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வெங்கடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவர் வெங்கடசாமியை யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சந்தேக மரணம் பிரிவின் கீழ் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com