மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
Published on

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் நடூர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). விவசாயி. இவர் மொபட்டில் கோபாலபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் இறந்தார். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com