கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

வெண்ணந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Published on

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 40). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் மற்றும் கிணறு உள்ளது. நேற்று தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது பழனிசாமி தவறி கிணற்றில் விழுந்துள்ளார். பின்னர் கிணற்றில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வெண்ணந்தூர் போலீசார் மற்றும் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயைணப்பு நிலைய வீரர்கள் பழனிசாமி உடலை மீட்டனர். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com