கரூர் அருகே விவசாயி மீது துப்பாக்கி சூடு - 3 பேரிடம் விசாரணை

படுகாயம் அடந்த விவசாயி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் அருகே விவசாயி மீது துப்பாக்கி சூடு - 3 பேரிடம் விசாரணை
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி, வலையபட்டி சேர்ந்த கருணகிரி(50) என்பவர் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் அருணகிரி படுகாயம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கடவூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விவசாயி முதுகில் நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில்,அவரது தோட்டத்துக்கு அருகே 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com