விவசாயி தற்கொலை

திருக்குறுங்குடி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தற்கொலை
Published on

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே வட்டக்குளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 52). விவசாயியான இவர் மது குடித்து விட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர் மது போதையில் வீட்டில் தகராறு செய்தார். இதை அவரது மனைவி ஜெயலட்சுமி கண்டித்தார். இதனால் மனமுடைந்த நம்பிராஜன் ஊருக்கு அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com