விவசாயி தற்கொலை

நெல்லை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தற்கொலை
Published on

நெல்லை அருகே தருவை புதுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயியான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று முருகன் குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com