விவசாயி தற்கொலை

நத்தம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தற்கொலை
Published on

நத்தம் அருகே உள்ள பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அடைக்கண் (வயது 42). விவசாயி. இவர் கடந்த 27-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அடைக்கன் உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com