விவசாயியை தாக்கி நகை, பணம் பறிப்பு; 3 பேர் கைது

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கி நகை, பணம் பறித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயியை தாக்கி நகை, பணம் பறிப்பு; 3 பேர் கைது
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா மகன் செல்வம் (வயது 33). விவசாயி. சம்பவத்தன்று தாதனூத்து கிராமத்தை சேர்ந்த பெருமாள் தனது நண்பர்களுடன் ராஜாபுதுக்குடி சென்று செல்வத்தை அழைத்துக்கொண்டு டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மது அருந்திவிட்டு ஒரு பிரச்சினை தொடர்பாக செல்வத்திடம் தகராறு செய்து, அவரை தாக்கி 1 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செல்வம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தாழையூத்து தாதனூத்தை சேர்ந்த பெருமாள் (44), சங்கர்நகர் பேரூராட்சி அலுவலக தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (23), சுந்தரம் மகன் வலதி (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்ட நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com