வாழை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

வாழை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
வாழை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
Published on

கும்பகோணம் பகுதியில் விவசாயிகள் வாழை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாழை சாகுபடி

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் மாற்று பயிரான கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கும்பகோணத்தை அடுத்த மாங்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக நிலங்களை தயார்படுத்தி வாழை நடவு செய்வதற்காக நவீன எந்திரம் மூலம் குழிகள் அமைக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

நடவு பணிகள்

இதுகுறித்து வாழை விவசாயி ஒருவர் கூறுகையில், நான் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வாழை நடவு செய்துள்ளேன்.

வாழை மரங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு 12 மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகும். தற்போது நடவு செய்யப்படும் வாழை மரங்களை வருகிற ஆனி மாதத்தில் அறுவடை செய்து பொங்கல் பண்டிகைக்கு வாழைத்தார்கள், வாழை இலை உள்ளிட்டவை விற்பனை செய்ய ஏதுவாக தற்போது நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைமரங்கள்

மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின் போது திருமண மண்டபங்கள் வீடுகளின் வாசல்களில் வாழை மரங்களை கட்டுவதற்கு பிரத்தியேகமாக வாழை மரங்களை தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக 6 மற்றும் 7 அடி அளவில் இடைவெளி விட்டு நவீன எந்திரம் மூலம் வாழை மரங்களை நடவு செய்ய நிலத்தில் குழி தோண்டி தயார் செய்து வருகிறோம். வாழைக்கன்றுகளை நடவு செய்த பின் மேலுரம் இட்டு முறையாக பராமரித்து வளர்ச்சி அடைந்தபின் ஆனி மாதம் முதல் அறுவடை பணிகள் நடைபெறும் என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com