வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி விவசாயிகள் போராட்டம்

வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி விவசாயிகள் போராட்டம்
Published on

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே மட்டியாரேந்தல் கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சத்யபிரியா தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அர்ஜூனன், வைகை பாசன விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன், ஊர் நல அலுவலர் அழகு மீனா முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மட்டியரேந்தல், தாலியரேந்தல், கடம்போடை பகுதிகளில் நெல் மற்றும் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியால் பயிர் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, நிவாரணம் வழங்ககோரி கூட்டத்தை புறக்கணித்து வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com