பள்ளிபாளையத்தில் 3-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிபாளையத்தில் 3-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
Published on

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அருகே பிலிக்கல் மேடு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று 3-வது நாளாக கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நல்லாகவுண்டர் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாயிகள் கரும்பை கையில் பிடித்து கொண்டு உழவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயம் செய்திட வேண்டும், ஒவ்வொரு விவசாயியும் தனித் தனியாக இழப்பீடு பெறும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும், உழவர்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தங்கு தடை இன்றி வழங்க வேண்டும், கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com