அறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை

அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை
Published on

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்லணை கால்வாய் பாசனத்தாரர்கள் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை ஆகிய தாலுகாவில் தஞ்சை மாவட்ட பகுதியில் இருந்து கல்லணை கால்வாய் வழியாக வரும் தண்ணீர் மூலம் 28 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தாலுகா பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பருவத்திற்கு ஏற்ப நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவிரி நீர் போதிய அளவு வராததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த நேரத்தில் விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் அவசியம் தேவை. காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அணைகளில் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும். அதேப்போல் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை பெற்று தர தமிழக முதல்-அமைச்சர் முயற்சி செய்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com