பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி சான்றிதழ் வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி சான்றிதழ் வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
Published on: 

சென்னை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தெற்கு மாவட்டக்குழு (இந் திய கம்யூனிஸ்டு கட்சி சார்பு) நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி எவ்வித நிபந்தனைகளும் இன்றி பயிர்க்காப்பீடு செய்வதற்கான சான்றிதழ்களை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X