அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மேலாத்தூர் ஊராட்சியில் சிக்கப்பட்டி மற்றும் ஆலங்குடி புறநகர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவிடும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு நிலங்கள் 100 ஏக்கருக்கும் மேல் இருப்பதால் அந்த நிலங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் விவசாய நிலங்களில் அதிகாரிகள் புறவழிச்சாலை அமைத்தால் விவசாயிகளை சேர்த்து புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் எனவும் அறிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com