விவசாயிகள் பரிசு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகள் பரிசு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பரிசு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

விவசாயிகளுக்கு பரிசு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு என்ற தலைப்பின் கீழ் இயற்கை வேளாண்மை விளைபொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாயி தொழில்நுட்பம் மற்றும் புதிய எந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்பிற்கு ரூ.1 லட்சமும், புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்பிற்கு ரூ.1 லட்சமும் என வேளாண்மைத்துறைக்கு இத்திட்டத்தில் ஆக மொத்தம் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவம்

இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற 'புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்பு' இனத்திலும், 'புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்பு' இனத்திலும் தகுதியுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கிடைக்கப்பெறும். அதனை பூர்த்தி செய்து, பதிவு கட்டணமாக ரூ.100 மட்டும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் உரிய அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com