தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம் - திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்

தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம் என்று அதிகாரி ஜெபக்குமாரி அனி தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம் - திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்
Published on

மானியத்தில்

திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, உதிரி மலர்கள், கத்திரி, மிளகாய், பரப்பு விரிவாக்கம் நிகழ்வுகளை குடில் அமைத்தல் செங்குத்து தோட்டம் அமைத்தல் ஹைட்ரோபோனிக்ஸ் மாடித்தோட்ட கலைகள் பழஞ்செடி தொகுப்புகள் காளான் குடில் அமைத்தல் போன்ற இனங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பப்பாளி, கொய்யா, தர்ப்பூசணி, மல்லிகை, சம்பங்கி வெங்காயம் முருங்கை பரப்பு விரிவாக்கம் நிலப் போர்வை முதலியவை மாநிலத்தில் வழங்கப்பட உள்ளது மேலும் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 104 கிராம பஞ்சாயத்துகளில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் 5வகையான பழசெடிகள் அடங்கிய தொகுப்பு வழங்குதல், காய்கறி சாகுபடி பரப்பினை ஊக்குவித்தல் போன்ற இனங்கள் மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

விரிவான தகவல்களுக்கு

பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசன திட்டம் 450 ஹக்டேர் பரப்பளவில் யல்பட உள்ளது. இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https//www.tnhorticulture.tn.gov.in/ tnhortnet என்ற இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பித்தால் மட்டுமே பயன் பெற இயலும்.

மேலும் திட்டங்கள் சார்ந்த விரிவான தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை பள்ளிப்பட்டு-8870739991. ஆர்.கே. பேட்டை- 8870739991. திருத்தணி- 8248387638. திருவலங்காடு- 8608228276. கடம்பத்தூர்- 9790171116. பூண்டி- 8608228276. ஈக்காடு- 8248387638. எல்லாபுரம்- 9790171116. கும்மிடிப்பூண்டி- 6379388255. மீஞ்சூர்- 6385116971 சோழவரம்- 6385116971. புழல்- 6379388255. அம்பத்தூர்- 8778823117. பூந்தமல்லி- 8778823117 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com