விவசாயிகள் மாநாடு

வத்தலக்குண்டுவில் விவசாயிகள் மாநாடு நடந்தது.
விவசாயிகள் மாநாடு
Published on

அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு வத்தலக்குண்டுவில் நடந்தது. மாநாட்டுக்கு விவசாயி சந்திரபோஸ் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர்கள் திவாகர், ரங்கசாமி, அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் நாகம்மாள் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளில் இருந்து கிளை கால்வாய்கள் அமைத்து வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சோலார் மின்சாரம் தயாரிக்க விவசாய நிலங்களை வாங்க அனுமதி தரக்கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com