‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை

‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இதை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவந்தனர்.

தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியதாவது:-
துரைசந்திரசேகரன் (தி.மு.க.):- கஜா புயல் தாக்குதலால் டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை. எனவே, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமிழக அரசு நிதி பெற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகை போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.

சி.வி.சேகர் (அ.தி.மு.க.):- பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் மின் இணைப்பு சீராக வழங்கப்படவில்லை. அதிக அளவு ஊழியர்களை வரவழைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகளை வழங்கி, 5 ஆண்டு பராமரிப்பு செலவையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். உடைந்துபோன படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com